தமிழர் கணிதம் - வட்டத்தின் பரப்பளவு
கணக்கு பாடங்களில் நம் நாட்டு மாணவர்கள் மற்ற நாட்டு மாணவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள், எப்படி என்றால்,மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால்தான் கணிதம் பயிலமுடியும். ஆனால் இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள்கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம்.
வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காண, "காக்கைப்பாடினியம்" என்ற தொன்மையான நூலில் செய்யுள் வடிவிலேயே விளக்கியுள்ளனர்.
"வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி."
-காக்கைப் பாடினியம். (46 - 49)
விளக்கம் :
இதன்படி,
வட்டத்தரை = அரைச்சுற்றளவு = π * வி / 2
விட்டத்தரை = அரைவிட்டம் = வி/2
இதன்படி,
வட்டத்தின் பரப்பளவு = πவி2/4
குழி என்பது பரப்பைக் குறிக்கும் சொல்.