• "எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து"

    "All from 9 Last from 10"

    1203579 x 9999999, ஐந்து வினாடிக்குள் விடை காண முடியுமா?
  • "நெடுக்காக மற்றும் குறுக்காக"

    "Vertically and Crosswise"

    (999999999998)2, ஐந்து வினாடிக்குள் விடை காண முடியுமா?
  • "முன்னதை விட ஒன்று கூடுதலாக"

    "By one more than the previous one"

    9999999925 x 9999999996, ஐந்து வினாடிக்குள் விடை காண முடியுமா?
  • "அடித்தல் முறை"

    12345678987654321 என்ற எண்

    9 ஆல் மீதமின்றி வகுபடுமா?
  • "The First by the First and the Last by the Last"

    √6561 = ?

    பதினைந்து வினாடிக்குள் விடை காண முடியுமா?
Free Web Hosting

வேத கணிதம்

வேத கணிதமானது மிக வேகமான கணக்கீட்டு முறையாகும். இம்முறை மூலம் பல சிக்கலான கணக்குகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருக்குறள்

திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்தின் முக்கியதுவத்தை பறைசாற்றியுள்ளார். பழையகால இந்தியா, எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும், பூஜ்ஜியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டு முறைக்கு அடிகோலிட்டது.

வேத கணிதம் 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில், ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமிகள் என்ற இந்து சமய அறிஞர் மற்றும் கணிதவியலாளரால் உருவாக்கப்பட்டது. இம்முறைமையானது 16 முதன்மை வாய்ப்பாடுகளையும் 13 துணை வாய்ப்பாடுகளையும் கொண்டுள்ளது. தீர்த்த சுவாமி, வேதங்களைப் படித்து அவற்றிலிருந்து இந்த வாய்ப்பாடுகளை உருவாக்கியதாகக் கூறியுள்ளார், ஆனால் அவ்வாய்ப்பாடுகள் எதுவும் வேதங்களில் இல்லை (பழங்கால தமிழ் ஓலை சுவடிகளிலிருந்து தழுவப்பட்டிருக்கலாம்) எனினும் வேத கணிதம் தரும் கணக்கீட்டு முறைகள் ஆக்கபூர்வமானவையாகவும் என்கணிதத்திலும் இயற்கணிதத்திலும் சிறப்பாகப் பயன்படுத்தக்கூடியவையாகவும் அமைந்துள்ளன.

இந்த சூத்திரங்கள் மூலமாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்கம், வர்கமூலம், கணம், கணமூலம், சிக்கலெண்கள், வகுபடுந்தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், இருபடி சமன்பாடு, திரிகோணமிதி, பிதாகரஸ் தேற்றம், அப்போலோனியஸ் தேற்றம் போன்றவற்றை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காண முடியும். மேலும்...

பழங்கால தமிழ் கணிதம்

September 22, 2012

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. அக்கால தமிழ் பாடல்கள் நம்முடைய புலவர்களின் கணித அறிவினை பரைசாற்றுகிறது......

எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் பெருக்க

October 23, 2012

"கடைசி மற்றும் கடைசிக்கு முன்னர் இருமடங்கு - The Ultimate and twice the Penultimate" சூத்திரம் மூலமாக எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் சுலபமாக பெருக்க முடியும்......

12345678987654321 என்ற எண் 9 ஆல் வகுபடுமா?

October 11, 2012

ஓர் எண் 9 ஆல் வகுபடுமா என்பதை மூன்று வழிகளில் காணமுடியும்.அ. சாதாரண முறை
ஆ. எண்ணிலுள்ள இலக்கங்களின் கூடுதல் 9ஆல் வகுபட்டால் அந்த எண் 9 ஆல் வகுபடும்
இ. அடிதல் முறை (சுலபமான முறை)

பெருக்கல் (Base Method)

November 14, 2011

"எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து"மற்றும் "நெடுக்காக மற்றும் குறுக்காக" சூத்திரங்கள் மூலமாக அடிப்படை எண்களுக்கு அருகாமையிலுள்ள இரு எண்களுக்கான பெருக்கல்களை மிக எளிதாக காண முடியும்...

வர்க்க எண்கள்

October 16, 2011

ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கும் போது கிடைக்கும் எண் அந்த எண்ணின் வர்க்கம் எனப்படும். முதலில் 5ல் முடிவடையும் எண்களின் வர்க்கத்தை "முன்னதை விட ஒன்று கூடுதலாக" என்கிற சூத்திரத்தை பயன்படுத்தி விரைவாக காணலாம்......

மேஜிக் ஒன்பது

October 1, 2011

எண் ஒன்பதை எண்களின் அரசன் என்றும் அழைப்பர். ஓர் எண்ணை 9,99,999.....போன்ற தொடர் எண்களால் பெருக்க "முன்னதை விட ஒன்று குறைவாக" (By One Less than the Previous one) என்கிற சூத்திரத்தை பயன்படுத்தி விரைவாக காணலாம்.

பெருக்கல்

October 17, 2011

நாம் காலங்காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கீழ்கண்ட பெருக்கல் முறையைதான் பயன்படுத்தி வருகிறோம், "நெடுக்காக மற்றும் குறுக்காக" சூத்திரம் மூலமாக மிக எளிதாக, வேகமாக கணக்கிட முடியும்....

கிழமையை கண்டுபிடித்தல்

October 1, 2011

10,000 வருடத்திற்கான அசத்தல் நாள்காட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மனதாலேயே எந்தவொரு தேதியிக்கான கிழமையை கண்டுபிடிக்க ஒரு பொதுவான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது......

எண் ஏழின் சிறப்புக்கள்

September 29, 2012

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்......

கூட்டல் முறையில் கழித்தல்

November 3, 2012

எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து ( All from 9 and Last from 10 ) சூத்திரமூலமாக மிக கடினமான கழித்தல் கணக்குகளை மிக எளிதாக காண முடியும். வேத கணிதமூலமாக கழித்தலையும் கூட்டல் மூலமாகவே காண முடியும்.

எந்த ஓர் எண்ணையும் 11 ஆல் பெருக்க

October 24, 2012

எந்த ஒரு எண்ணையும் 11 ஆல் பெருக்க, "கடைசி பதம் மட்டும்" (Only the last terms) சூத்திரமூலமாக மிக எளிதாக, ஓரு வரியிலேயே விடை காணமுடியும்......

முழு வர்க்கமூலங்கள்

February 18, 2012

எந்த ஒரு எண்ணும் x*x என்று எழுதப்பட்டால் x என்பது அவ்வெண்ணின் வர்க்கமூலம் எனப்படும்......